“மனசு இருந்தா காசு தாங்க… ஆட்டோ ஃப்ரீ”…. !” – மதுரையில் இலவச பஸ்ஸுக்கு செக் வைத்த ஓட்டுநர்….. இந்த மனசுக்கு யாருக்கு வரும்…!

Spread the love

மதுரையில் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது மற்றும் போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற தொடர் எதிர்ப்புகள் அரங்கேறி வருகின்றன. இந்தச் சூழலில், பயணிகளைக் கவரும் விதமாக கீழவாசல் பேருந்து நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “மாட்டுத்தாவணி போகிறீர்களா? ஆட்டோ ஃப்ரீ… ஏறிக்கொள்ளுங்கள். மனசு இருந்தால் காசு கொடுங்கள்” என்று அவர் விடுத்த வித்தியாசமான அழைப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும் இந்தக் கட்டணச் சலுகையை அறிவித்த அவர், அரசு ஊழியர்களுக்கு மட்டும் இரட்டிப்புக் கட்டணம் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுச் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளார். அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியை உற்சாகமாக வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்குச் பொதுமக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேரக் குவிந்து வருவதுடன், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்களின் தங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை விவேகமான மற்றும் வித்தியாசமான முறையில் இந்த ஓட்டுநர் வெளிப்படுத்தியுள்ளதாகச் சிலர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இந்தச் செயல் வெறும் வீம்பு அல்லது விளம்பரத்துக்காகச் செய்யப்பட்டது என்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவ்வாறான மாறுபட்ட கருத்துகளால் இணையத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

ஒருபுறம் இலவசப் பேருந்துப் பயணம் பெண்களுக்குப் பயனுள்ளதாக அமைந்து அவர்களின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து வரும் அதேவேளையில், மறுபுறம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எழும் கோரிக்கைகளும் ஓயாமல் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சிக்கலுக்கு உரிய தீர்வுகாண அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Nanthini

Recent Posts

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

56 seconds ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

8 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

16 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

24 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

31 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

40 minutes ago