உஷார் மக்களே…! “G-pay-யில் 1 ரூபாய் அனுப்ப சொல்லி” ரூ.14000 ஆட்டையை போட்ட வாலிபர்… சென்னையில் நடந்த பலே மோசடி…!!

Spread the love
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சாந்தி (31), அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, ஆட்டோவில் வந்திறங்கிய வாலிபர் ஒருவர், “நான் ஆட்டோ சவாரிக்கு ரூ.300 கொடுக்க வேண்டும், கையில் ரொக்கம் இல்லை. நீங்கள் எனக்கு ரூ.300 கொடுத்தால், உங்கள் ஜி-பே  எண்ணிற்கு அனுப்பிவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அதற்குச் சம்மதித்த சாந்தி, தனது ஜி-பே எண் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க, அந்த வாலிபரின் வங்கி கணக்கிற்கு ஒரு ரூபாய் அனுப்பியுள்ளார். அப்போது, சாந்தி தனது ரகசிய குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்ததை அந்த வாலிபர் கவனித்துள்ளார். பின்னர், “அவசரமாகப் பேச வேண்டும்” என்று கூறி சாந்தியிடமிருந்து அவரது செல்போனை வாங்கியுள்ளார். சிறிது நேரம் பேசிவிட்டு, செல்போனைத் திருப்பித் தந்துவிட்டு அதே ஆட்டோவில் தப்பிச் சென்றார்.
அவர் சென்ற பிறகு செல்போனைச் சரிபார்த்த சாந்திக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.14,000 வேறொரு கணக்கிற்கு ஜி-பே மூலம் மாற்றப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி ‘பரத்’ என்பவரைக் கைது செய்தனர். சாந்தி ஒரு ரூபாய் அனுப்பியபோது அவரது ரகசிய எண்ணைத் தெரிந்துகொண்ட பரத், செல்போனில் பேசுவது போல நடித்து பணத்தைத் திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.9,000 ரொக்கம் மற்றும் ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

5 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

6 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

6 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

6 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

7 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

7 மணத்தியாலங்கள் ago