அடடே சூப்பர்… இனி 10 நிமிடத்தில் புதுச்சேரிக்கு போகலாம்… ECR- ல் பறக்க போகும் வாகனங்கள்… அரசின் அசத்தலான பிளான்…!

By Divyamayakannan on ஆவணி 20, 2025

Spread the love

சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் நாளுக்கு நாள்  வாகன நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சாலையை விரிவாக்க நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. இருப்பினும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம்  மட்டும் வசூலித்து வருகிறார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் வாகன நெரிசல் காரணத்தினால் விபத்துகளும் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுவும் வார இறுதி நாட்களில் அதிகமான விபத்துகள்  நடக்கிறது.தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்யும் பணியில்  ஈடுபட்டு வருகிறது . சுமார் 103 கிலோமீட்டர் தூரம் கொண்ட மாமல்லபுரம் முதல் புதுச்சேரி சாலையில் மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம் – முகையூர் இடையில் 23 கிலோமீட்டர் தூரம் உள்ளது, முகையூர் – மரக்காணம் இடையில் 36 கிலோ மீட்டர் தூரம் உள்ளது, மரக்காணம் – ஆழியூர் இடையில் 46 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்தச் சாலைகளை 4 வழிச் சாலையாக மாற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லலாம் விபத்துகளை ஏற்படுத்தக்கூடிய கால்நடைகள் சாலையின் குறுக்கே வராதது போல் சாலையின் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

   

இந்நிலையில் மத்திய அமைச்சரவைக்  கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மரக்காணம் – புதுவைக்கு இடையே வரப் போகின்ற 4 வழி சாலைக்கு ரூ.2,157 கோடியை ஒதுக்கி உள்ளார் பிரதமர் மோடி. அதேபோல் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி தாக்கல் செய்த மசோதாவை திருத்தப்பட்டு புதிய மசோதாவை உரிய நேரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.