குளிர் பானத்தில் மயக்க மருந்து.. விசா எடுக்க வந்த இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலதிபர்… அதிர்ச்சி சம்பவம்..!

By Divyamayakannan on ஆவணி 20, 2025

Spread the love

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலாவைச் சேர்ந்த ஷிபு (48). இவர் அதே பகுதியில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறார். வெளிநாட்டு வேலைக்கு செல்ல விசா தருவதாக கூறி ஷிபு என்னை வீட்டிற்கு வரவழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததார். அது மட்டும் இல்லாமல் மயங்கி நிலையில் கிடந்த என்னை வீடியோ எடுத்து மிரட்டினார் என்று  இளம் பெண் ஒருவர் போலிஸில்  புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் நடவடிக்கை எடுக்காதக் காரணத்தினால் கேரளா முதல் மந்திரி, டி.ஜி.பி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். அதன்பின் தொழிலதிபர் ஷிபு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இளம்பெண் என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளார் மிரட்டி பணம் பறிப்பதற்காகவே இப்படி செய்கிறார் என்று  அப்பெண் மீது ஷிபு போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் இளம்பெண் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான தொழிலதிபர் ஷிபுவை போலீசார் தேடி  வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.