“திருவிழாவிற்கு சென்ற இடத்தில் வாலிபருடன் தனிமை…” சிறுமியை மிரட்டி சிறுவர்கள் உள்பட 4 பேர் செய்த கொடூரம்… அதிர்ந்து போன தாய்… பரபரப்பு பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 2, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி ஊர் கோவில் திருவிழாவிற்குச் சென்றபோது, அவருக்கு அறிமுகமான சந்தோஷ் (24) என்பவர் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்றுள்ளார்.

அவர்கள் இருவரும் தனியாகச் சென்றதை நோட்டமிட்ட அரவிந்த், ஆறுமுகம் மற்றும் 17, 15 வயதுடைய இரு சிறுவர்கள் என 4 பேர் கொண்ட கும்பல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளது. அங்கிருந்த சந்தோஷை விரட்டிவிட்டு, அந்தச் சிறுமிக்கு 4 பேரும் பாலியல் தொல்லை அளித்ததுடன், வெளியில் சொன்னால் குடும்பத்திற்குத் தெரியப்படுத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர்.

   

வீடு திரும்பிய சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாய் விசாரித்தபோதும், கிராமத்தில் இந்த விஷயம் பரவிய பின்னருமே நடந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்துச் சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில்ளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுமியை அழைத்துச் சென்ற சந்தோஷ் உட்படப் பாலியல் தொல்லை அளித்த அரவிந்த், ஆறுமுகம் மற்றும் இரு சிறுவர்கள் என மொத்தம் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.