இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்ரி ஹெகன் என்ற பெண்மணி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் தளம் வழியாக 60 வயதான கேரி நியூவில் என்பவரைச் சந்தித்துத் திருமணம் செய்துகொண்டார். தன் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என நம்பிய அந்தத் தாய்க்குத் தெரியாமல், அவரது 4 வயதுச் சிறுமி சாராவிடம் கேரி நியூவில் கொடூரப் பாலியல் லீலைகளைத் தொடங்கியுள்ளார்.
தாயார் வேலைக்குச் சென்ற நேரங்களைப் பயன்படுத்தி, சிறுமியை அச்சுறுத்தி உடல் பாகங்களைக் காட்டச் சொல்லி தன் அந்தரங்க உறுப்புகளைத் தொடவைத்துத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாலியல் ரீதியாகச் சீரழித்து வந்துள்ளார். இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சாரா, தனது 16 வயதில் பள்ளித் தோழியிடம் நடந்த கொடூரங்களை அழுதுகொண்டே கூறியுள்ளார். தோழியின் பெற்றோர் உடனடியாகப் போலிஸில் புகாரளித்ததைத் தொடர்ந்து காம மிருகம் கேரி நியூவில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 13 வயதுக்குட்பட்ட குழந்தையைச் சீரழித்த குற்றங்களுக்காக கேரி நியூவில்லுக்கு 22 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து பிரைட்டன் கிரவுன் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்தது. “இனி அந்த அரக்கனை வெளியில் பார்க்கவே முடியாது, எனக்கு மாபெரும் நிம்மதி கிடைத்துள்ளது” எனப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
