“முதுகில் குத்திவிட்டார்கள்” யாருமே அப்பாவை வந்து பாக்கல… தவெகவில் இணைந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் – அதிமுக மீது பகிரங்க புகார்..!!

By Soundarya on மாசி 21, 2026

Spread the love

அதிமுக முன்னாள் சபாநாயகரும், தற்போதைய அவிநாசி தொகுதி எம்எல்ஏ-வுமான பி. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், இன்று (பிப். 21) அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். முன்னதாக அதிமுகவின் ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராகவும், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளராகவும் பணியாற்றி வந்த அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அவிநாசி தொகுதியில் போட்டியிட அதிமுகவில் விருப்பமனு அளித்திருந்தார்.

கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய லோகேஷ், அதிமுக தலைமை மீது கடுமையான புகார்களை முன்வைத்தார். தனது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது கட்சியில் இருந்து ஒருவர்கூட வந்து பார்க்கவில்லை என்றும், அதிமுக தற்போது அடித்தட்டு மக்களின் ஆதரவை இழந்துவிட்டதாகவும் அவர் வேதனையோடு தெரிவித்தார். மேலும், கடந்த 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டபோது தான் கடுமையாக உழைத்ததாகவும், ஆனால் கட்சியின் சில நடவடிக்கைகளால் “முதுகில் குத்தப்பட்டதாக” அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த அதிரடி மாற்றம் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.