எனக்கே இடம் இல்லன்னு சொல்றியா…? செக்யூரிட்டியை ஓங்கி அறைந்த முன்னாள் போலீஸ் அதிகாரி…! இது என்ன சார் நியாயம்…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் உள்ள பிரபல கோகலே கல்வி நிறுவனத்தின் நுழைவாயிலில், ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான பானுபிரதாப் பார்ஜே என்பவர் தனது வாகனத்தை நிறுத்துவதற்காக வந்துள்ளார். அப்போது அங்குப் பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர், வாகனங்கள் நிறுத்தும் இடம் முழுமையாக நிரம்பிவிட்டதாகக் கூறி வாகனத்தை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் போலிஸ் அதிகாரி, அந்தச் செக்யூரிட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் திடீரென அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்த மோதல் சம்பவம் முழுவதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகி, தற்போது இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஊழியரைத் தாக்கியது மட்டுமின்றி, அவர் தன்னை அசிங்கமாகப் பேசியதாகக் கூறி அந்த அதிகாரி டெக்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகக் கோகலே நிறுவனம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் வெளியிடவில்லை.