“தினகரனுக்கு விழுந்த அடுத்தடுத்த அடி”… சற்றுமுன் விலகிய முக்கிய நிர்வாகி… திமுகவின் மெகா ஆபரேஷன் சக்சஸ்….!

By Nanthini on சித்திரை 3, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து (அமமுக) முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016-ல் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த பார்த்திபன், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கட்சியின் சமீபத்திய முடிவுகளில் அதிருப்தி அடைந்த அவர், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருடன் அமமுக அவைத் தலைவர் கோபால் மற்றும் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கோ.தண்டபாணி ஆகியோரும் திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள அமமுக-விற்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமமுக-விற்கு செல்வாக்கு மிக்க தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, வெற்றி வாய்ப்பு குறைவாகக் கருதப்படும் தொகுதிகளை தினகரன் பெற்றுள்ளதாக நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த பலருக்கு சீட் கிடைக்காததும், சீட் ஒதுக்கீட்டில் நிலவிய குளறுபடிகளுமே இந்த விலகல்களுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

   

MLA Sholingur Parthiban

   

தென் மாவட்டங்களில் அமமுக-வின் முகமாகத் திகழ்ந்த துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜாவின் விலகல் அக்கட்சிக்கு மற்றுமொரு பேரிடியாக அமைந்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தினகரன் காட்டிய மெத்தனப் போக்கினால் அதிருப்தியில் இருந்த மாணிக்கராஜா திமுகவில் இணைய முடிவெடுத்தார். இதை முன்கூட்டியே அறிந்த தினகரன், அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தாலும், அவர் திமுகவில் இணைந்தது தென் மாவட்ட அரசியலில் அமமுக-விற்குச் சவாலாக மாறியுள்ளது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவதால் அமமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டுள்ளது.