தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு விசிக தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க திமுகவின் உதவியுடன் அதிமுக மூத்த தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் முயற்சி மேற்கொண்டதாக அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்றுதான் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது தவெகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துக்கொண்டு, சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக இவர்கள் வாக்களித்துள்ளதாகவும் தனது பேட்டியில் பகிரங்கமாகத் தெரிவித்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
