“ஒரு மனைவி இருக்கும்போது 2-வது மனைவி எதுக்கு?”…. CM விஜய்யை வச்சு செஞ்ச ஐ.பெரியசாமி… பரபரப்பு பேட்டி…!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு ரூ.3,000 கோடியை நிறுத்தி வைத்துள்ள சூழலில், இதனை எதிர்த்துத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குரல் கொடுக்காதது மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பது போல் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை தாய்மொழியாகத் தமிழும், உலக இணைப்பு மொழியாக ஆங்கிலமும் மட்டுமே இருக்க வேண்டும்; இங்கு இந்திக்கு இடமில்லை,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், இருமொழிக் கொள்கையே போதுமானது என்பதை உணர்த்தும் வகையில், “ஒரு மனைவி இருக்கும் போது இரண்டாவது மனைவி எதற்கு?” என்று கேள்வி எழுப்பிய அவர், மாநிலத்தின் மொழி உரிமையிலும் கல்வி நிதியிலும் தவெக அரசு காட்டும் மெத்தனப் போக்கைக் கடுமையாகச் சாடினார்.