BREAKING: கர்நாடக முன்னாள் காங் MLA காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஷாமனூர் சிவசங்கரப்பா தனது 94வது வயதில் காலமானார். வயது தொடர்பான உடல்நலக் கோளாறுகள் காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று  மாலை 6.45 மணியளவில் உயிரிழந்தார். இவர் தற்போதைய தவனகெரே தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், அகில இந்திய வீரசைவ மகாசபையின் தேசிய தலைவராகவும் இருந்தார்.

இவர் ஆறு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், கர்நாடக அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவு கர்நாடக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.