முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய இவர், அதன் பின்னர் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார். இவரது மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தரப்பிலிருந்து ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
