தமிழக அரசு கடன் வாங்குவது 21 சதவீதம் குறைந்துள்ளதை தவெக அரசு தனது சாதனையாக முன்னிறுத்தி வரும் நிலையில், அதற்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கேள்விகளை எழுப்பி உள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் தமிழக அரசின் கடன் ரூ.51,300 கோடியிலிருந்து ரூ.40,500 கோடியாகச் சரிந்துள்ளதால், அதிக கடன் வாங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 5-வது இடத்திற்கு இறங்கியுள்ளது.
இதனைச் சாதனையாகச் சொல்லும் தவெக அரசு, மறுபுறம் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.48,000 கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள தங்கம் தென்னரசு, “பணிகளை முடக்கிவிட்டு, பில் தொகைகளை நிலுவையில் வைத்துவிட்டு, பண இருப்பைக் காட்டுவது நிதி மேலாண்மையின் சாதனையாகாது” என விமர்சித்துள்ளார். மேலும், மூலதனச் செலவுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த முழு வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
