BIG NEWS: திமுகவின் முக்கிய புள்ளி தவெகவில் இணைந்தார்…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அனைத்திந்திய அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராகவும், மாவட்டச் செயலாளராகவும் செல்வாக்குடன் விளங்கிய இவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாவார்.

அதிமுக மேடைகளில் இன்றும் உணர்ச்சிப்பூர்வமாக ஒலிக்கும் ‘பூமி உள்ள வரை எங்கம்மா புகழே நிலைத்திருக்கும்’ என்ற புகழ்பெற்ற பாடலை எழுதிய பெருமை இவருக்குரியது. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குச் சென்று, பின்னர் 2019ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த கலைராஜன், அங்கு தனக்கு உரிய அங்கீகாரமும் முக்கியத்துவமும் கிடைக்காததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தற்போது தவெகவில் இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.