தாராபுரம் முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ். காளிமுத்து காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

By Soundarya on சித்திரை 29, 2026

Spread the love

தாராபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான (Ex MLA) வி.எஸ். காளிமுத்து (வயது 65), இன்று காலை 11:30 மணியளவில் காலமானார். இவர் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை தாராபுரம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். மேலும், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு உறுப்பினராகவும், வீராட்சிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார்.

அவரது மறைவுச் செய்தி கேட்டு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள், மாற்று அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் பணியில் நீண்ட அனுபவம் கொண்ட இவரது மறைவு தாராபுரம் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரளானோர் அவருக்குத் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.