டெல்லியில் 14 வயது சிறுவனான அபவ், தனது உறவினர் யாக்யா (20) என்பவருடன் ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளான். போட்டி முடிந்ததும், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டிற்கு வந்துவிடுவோம் என்றும் தனது தந்தைக்கு அபவ் மெசேஜ் அனுப்பியுள்ளான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் வீடு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
“சீக்கிரம் வருகிறேன்” என்று தந்தை நம்பிக்கையுடன் காத்திருந்த வேளையில், மகன் பிணமாக வீடு திரும்பியது அந்த குடும்பத்தையே மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் உயிரிழப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, சமூக வலைதளத்தில் சிரித்த முகத்துடன் பதிவிட்ட கடைசிப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கலங்கச் செய்துள்ளது. ஒரு மகிழ்ச்சியான பயணம் இப்படி சோகத்தில் முடியும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
