“‘அவர் ஒரு தற்குறி!’.. நயினார் நாகேந்திரனை ஓப்பனாக சாடிய முன்னாள் பாஜக நிர்வாகி.. பரபரக்கும் அரசியல்”..!!

Spread the love

தமிழக பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலை தொடங்கிய “வி தி லீடர்ஸ்” அமைப்பில் இணைந்த முன்னாள் நிர்வாகிகள் மதுரையில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பாஜக முன்னாள் நிர்வாகி மகா.சுசீந்திரன், 2026-க்குள் இந்த அமைப்பில் 1 கோடி பேர் இணைய வாய்ப்புள்ளதாகவும், விரைவில் இது அரசியல் இயக்கமாக மாறி தேர்தலைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டார். தமிழக பாஜக தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு அடிபணிந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அண்ணாமலை கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை சிதைத்துவிட்டதாக ஆதங்கப்பட்டார். மேலும், 2026 தேர்தலில் பாஜக எதற்காக அதிமுகவிடம் மண்டியிட்டது என்று தெரியவில்லை என்றும், நயினார் நாகேந்திரனும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் அடிமைகளாகச் செயல்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி தயாரித்துக் கொடுத்த வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தனர் என்றும் மிகக் கடுமையான புகார்களை முன்வைத்தார்.

அண்ணாமலையின் பங்களிப்பு மற்றும் கட்சியின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய சுசீந்திரன், தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர்கள் 7 பேரால் கொடுக்க முடியாத வளர்ச்சியை அண்ணாமலை மட்டுமே கொடுத்தார் என்றும், அவரது காலத்தில்தான் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்தது என்றும் பெருமிதம் தெரிவித்தார். பாஜகவினர் அழைத்தால் நயினார் நாகேந்திரன் போனை எடுப்பதில்லை. இப்போது கூட நயினார் நாகேந்திரனுக்கு போன் அடியுங்கள் போனை எடுத்தால் 1 இலட்சம் பரிசு தருகிறேன் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இரண்டு முறை மாநிலத் தலைவராகவும், ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் ஏன் இன்னும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் இருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். இதே வேளையில், தமிழக அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய் குறித்தும் விமர்சித்த அவர், முதலமைச்சர் விஜய் ஒரு மாயையில் பூத்த காளான் போன்றவர் என்றும், திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்றாகக் கட்சி தொடங்குவதாகக் கூறிவிட்டு, தற்போதைய ஆட்சியைத் தக்க வைப்பதற்காக அதிமுகவை இரண்டாக விஜய் உடைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய தஞ்சாவூர் பாஜக முன்னாள் நிர்வாகி இளங்கோ, நயினார் நாகேந்திரன் போன்ற திராவிட சித்தாந்தம் கொண்ட ஒரு தற்குறியை மாநிலத் தலைவராக நியமித்ததுதான் பாஜகவின் ஒட்டுமொத்த தோல்விக்குக் காரணம் என்று மிகக் காரசாரமாகத் சாடினார். தமிழக பாஜகவில் வெறும் 15 பேர் மட்டுமே முக்கியப் பொறுப்புகளில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், எந்தவொரு தேர்தல் வந்தாலும் அவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிற்பார்கள் என்றும் அடுக்கடுக்கான புகார்களை அள்ளி வீசினார். ஆனால், இந்த 15 பேரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் போட்டியிட மாட்டார்கள், ஏனென்றால் அதில் அவர்களுக்கு எந்தவிதமான ‘கலெக்சனும்’ கிடைக்காது என்று விமர்சித்த அவர், அண்ணாமலையை கட்சியை விட்டு வெளியேற்றிவிட்டு பாஜக என்ன சுகத்தைக் காணப் போகிறது எனத் தெரியவில்லை என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Muthu Mani

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

5 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

15 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

25 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

32 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

43 minutes ago

அதிர்ச்சி… தற்கொலை முடிவை மாற்றிய முதலை… ஆற்றில் குதித்த பெண்ணை… மரண பய காட்டி காப்பாற்றிய விசித்திர சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…

55 minutes ago