தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், பிற முன்னணி கட்சிகளிலிருந்து அடுத்தடுத்து பலரும் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், கிணத்துக்கடவு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான (2016 – 2021) எட்டிமடை சண்முகம், தவெகவின் முக்கிய அமைச்சர் KAS முன்னிலையில் தங்களை அக்கட்சியில் முறைப்படி இணைத்துக் கொண்டார்.

இவருடன் மதுக்கரை மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளான பாலு, கதிர்வேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளனர்; திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளிலிருந்தும் அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கி தாவி வருவது, கோவையின் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
