அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் இன்னும் சற்றுநேரத்தில் தவெக (TVK) கட்சியில் இணையவுள்ள செய்தி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் பாப்பிரெட்டிப்பட்டி, கலசபாக்கம், வீரபாண்டி உள்ளிட்ட முக்கியத் தொகுதிகளைச் சேர்ந்த 9 முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களை தவெக-வில் இணைத்துக் கொள்ளவிருக்கின்றனர்.
தெற்கு, டெல்டா, கொங்கு என அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் கட்சியின் முக்கிய முகங்களாக விளங்கிய மூத்த தலைவர்கள் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக மாற்று முகாமிற்கு மாறுவது, அதிமுகவிற்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுவதோடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியுள்ளது.
