ஆன்மீகக் களத்தில் அரசியல் துருவங்கள் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அருகில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் அமர்ந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிகாலை 4 மணிக்கே சண்முக விலாச மண்டபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆர்.பி. உதயகுமார் காத்திருந்த நிலையில், அர்ச்சகர்கள் அவரை அழைத்துச் சென்று விஜய்க்கு அருகிலேயே அமர வைத்துள்ளனர். தேர்தல் களத்தில் அதிமுகவும் தவெகவும் இரு வேறு திசைகளில் பயணித்து வரும் சூழலில், இந்தத் தற்செயலான சந்திப்பு பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
