ஓபிஎஸ் கூடாரத்தில் நிலநடுக்கம்… தவெகவில் இணையும் முன்னாள் அமைச்சர்?… செங்கோட்டையன் நடத்தும் ரகசிய ஸ்கெட்ச்….!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

கூட்டணி குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின்  நீண்ட மவுனம், அவரது அரசியல் முகாமில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வு குறித்து எந்த தெளிவான அறிவிப்பும் வராததால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக, “இனி ஓபிஎஸ்ஸுடன் பயணித்தால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்” என்ற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் செங்கோட்டையன் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளே கூடாரத்தைக் காலி செய்யத் தயாராவதை அறிந்த ஓபிஎஸ், தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் வெளியேறினால் அது தனது அரசியல் செல்வாக்கை முற்றிலும் சிதைத்துவிடும் என்பதால், அவர்களைத் தடுத்து நிறுத்தச் சமாதானப் படலத்தைத் தொடங்கியுள்ளார். “விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும், அவசரப்பட வேண்டாம்” எனத் தூது அனுப்பி வரும் அவர், அதிருப்தி நிர்வாகிகளை நேரில் சந்தித்துப் பேசவும் திட்டமிட்டுள்ளார். எனினும், ஓபிஎஸ்ஸின் இந்த பிந்தைய காலச் சமாதான முயற்சிகள் பலனளிக்குமா அல்லது அவரது ஆதரவாளர்கள் ‘வெற்றிக் கழகம்’ நோக்கிப் படையெடுப்பார்களா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.