“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” பழைய பகையை மறந்து ரிஷப் பண்ட்டை கட்டியணைத்த கோயங்கா… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!

By Soundarya on சித்திரை 6, 2026

Spread the love

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக, மைதானத்தில் இருந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட்டை கட்டிப்பணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக டெல்லி அணிக்கு எதிரான தோல்வியின் போது, கோயங்கா பண்ட்டிடம் கோபமாகப் பேசுவது போன்ற காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த வெற்றிக்குப் பிந்தைய கட்டிப்பணைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இப்போட்டியில் முதலில் ஆடிய ஐதராபாத் அணியை லக்னோ பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்திலேயே நிலைகுலையச் செய்தனர். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் முகமது ஷமியின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் விளையாடி 50 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் கடந்த போட்டியில் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதோடு, உரிமையாளர் மற்றும் கேப்டன் இடையேயான இணக்கமான உறவையும் இந்தச் சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.