தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் (Provisional Mark Sheets) பெற்றுக்கொள்வதற்கான முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியரை (HM) மே 22-ஆம் தேதி முதல் நேரில் அணுகி இந்தத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பள்ளிக்குச் செல்ல இயலாதவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழைத் தாங்களாகவே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது; இதற்கு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்குச் சென்று, அங்குள்ள ‘Notification’ பகுதியைத் தேர்வு செய்து, அதில் ‘SSLC PROVISIONAL MARK CERTIFICATE’ என்ற லிங்கைக் கிளிக் செய்து, தங்களின் விவரங்களை உள்ளிட்டு சான்றிதழை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
