தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அதிரடி உறுதியளித்துள்ளார். முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அதிகாரிகள் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, ரேஷன் கடை ஊழியர்கள் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காமல் மிகவும் கவனமுடனும், பொறுப்புடனும் பணியாற்ற வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் தங்களுக்கு நேரிடும் ரேஷன் கடை முறைகேடுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து 1967 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு உடனடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், இதன் மூலம் கூட்டுறவு மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் முழு வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
