“கல்யாணம் பண்ணதே தப்பா போச்சு”… ட்விஷா வழக்கில் அதிரடி திருப்பம்… சடலத்தை தூக்கி வரும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

By Swetha on வைகாசி 19, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ட்விஷா சர்மா (33) என்ற பெண்ணுக்கும், போபாலைச் சேர்ந்த வழக்கறிஞர் சமர்த் சிங் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, போபாலில் உள்ள கணவர் வீட்டில் ட்விஷா தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ட்விஷாவின் மரணத்திற்குப் பிறகு அவர் தனது தோழிகள் மற்றும் குடும்பத்தினருடன் பேசிய வாட்ஸ்அப் அரட்டைகள் (Chats) வெளியாகியுள்ளன. அதில், கணவர் மற்றும் மாமியார் வீட்டாரால் தான் அனுபவித்து வந்த கடுமையான மன உளைச்சல், வரதட்சணை கொடுமை மற்றும் மிரட்டல்கள் குறித்து அவர் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “நான் ஒரு நரகத்தில் மாட்டிக்கொண்டேன்” என்பது போன்ற அவரது வாட்ஸ்அப் செய்திகள், அவர் எந்த அளவிற்குத் துன்புறுத்தப்பட்டார் என்பதை வெளிச்சத்திற்குப் போட்டுக் காட்டியுள்ளன.

   

ட்விஷாவின் மரணத்தில் அவரது கணவர் குடும்பத்தாருக்குத் தொடர்பு இருப்பதாகப் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் இந்த வழக்கை முறையாகப் பதிவு செய்யத் தாமதித்ததாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வழக்கில் முறையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, தங்களது மகளின் மரணத்திற்குப் நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விஷாவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.