Categories: சினிமா

ஹீரோயினுக்கு AC ரூம், கார், கேரவேன்… ஹீரோவா நடிச்ச எனக்கு எதுவும் கிடையாது… ஓபனாக பேசிய நடிகர் முரளி…

Spread the love

முரளி தமிழ் சினிமாவில் நடித்த பிரபலமான நடிகர். இவர் தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். இவரை புரட்சி நாயகன் என்று மக்கள் அழைப்பர். இவரது தந்தை எஸ் சித்தலிங்கய்யா திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

14 வயதாக இருக்கும் போதே முரளி தனது தந்தையிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். சில காலம் எடிட்டிங் உதவியாளராக பணியாற்றினார். முதலில் தனது தந்தை இயக்கிய கன்னட திரைப்படத்தின் மூலமாக தான் திரையுலக பயணத்தை தொடங்கினார் முரளி. பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் முரளி. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்களை பெற்றார்.

அடுத்ததாக மணிரத்தினம் இயக்கிய பகல் நிலவு திரைப்படத்தில் ரேவதியுடன் நடித்தார். இந்த திரைப்படம் வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு சரிவர இவரது படங்கள் ஓடாததால் ரெட்டை ஹீரோ கதை அம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆரம்பித்தார் முரளி.

கார்த்திக்குடன் வண்ண கனவுகள், எஸ் வி சேகருடன் தங்கமணி ரங்கமணி, பிரபுவுடன் நினைவுச் சின்னம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பின்னர் 1990 ஆம் ஆண்டு விக்ரமனின் புது வசந்தம் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் வெற்றி அடைந்தது. பின்னர் 1991 ஆம் ஆண்டு இதயம் திரைப்படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு கிராமப்புற கதை களத்தை தேர்ந்தெடுத்த முரளி சின்ன பசங்க நாங்க, மணிக்குயில், மஞ்சுவிரட்டு, என் ஆசை மச்சான், பூமணி ஆகிய படங்களில் நடித்தார்.

அடுத்ததாக காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம் போன்ற கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து பிரபலமானார் முரளி. அந்த திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதற்குப் பிறகு சரிவர பேசப்படாத திரைப்படங்களில் நடித்த முரளி 2000 ஆண்டு வெற்றி கொடி கட்டு திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் அவருக்கு மிகவும் புகழை பெற்று தந்தது.

2000-களுக்கு ஆரம்ப காலத்தில் ஆனந்தம், சமுத்திரம், அள்ளித்தந்த வானம், காதல் பூக்கள் என பல நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு திரைப்பட விருதை வென்றார். முரளி கடைசியாக தனது மகன் அதர்வா முரளி ஹீரோவாக அறிமுகமான பானா காத்தாடி திரைப்படத்தில் விருந்தினர் தோற்றத்தில் தோன்றினார். அதுவே அவரது கடைசி திரைப்படமாகும். யாரும் எதிர்பாரா வகையில் தூக்கத்திலேயே மரணம் அடைந்தார் முரளி.

முன்னதாக ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட முரளி ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் சினிமாவில் கட்டிய வேறுபாடுகள் என்ன என்பதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் ஹீரோயின்களுக்கு எல்லாமே கிடைக்கும். உட்காரதற்கு சேர் கொடுப்பாங்க, ஏசி ரூம் காரு கேரவேன் எல்லாம் தருவாங்க. அதே நேரம் ஹீரோவா நடிச்ச எனக்கு எதுவுமே அந்த மாதிரி கிடைச்சது கிடையாது. அதை பார்த்து தான் என் அம்மா என் அப்பாவிடம் என்னை வைத்து படம் இயக்க சொன்னாங்க. யார் யாரையோ வைத்து எடுக்கறீங்க நம்ம பையன வச்சு நீங்க படம் எடுங்க அப்படின்னு சொன்னாங்க. அந்த மாதிரி ஹீரோக்கு உண்டான எதுவும் நான் கிடைக்கலைன்னு நான் வருத்தப்படல. ஆனா அந்த பாகுபாடு இருக்க வேண்டாம் தான் நான் நினைச்சேன் என்று ஓபனாக பேசியிருந்தார் முரளி.

admin

Recent Posts

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

6 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

9 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

13 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

16 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

20 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

22 minutes ago