தப்பி தவறியும் இந்த உணவுகளை மட்டும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடாதீங்க.. உங்களுக்கே ஆபத்தாக முடியும்..!

By Nanthini on ஆனி 15, 2025

Spread the love

நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு என்பது அவசியமான ஒன்று. பொதுவாகவே அனைத்து உயிரினங்களுக்கும் உணவு என்பது அடிப்படையாகும். உயிர் வாழ்வதற்கு அவசியமான உணவை நாம் ஆரோக்கியமானதாக எப்போதும் எடுத்துக் கொள்வதுதான் நல்லது. நாம் வீட்டில் சமைக்கக்கூடிய சில உணவுகள் நாம் செய்யும் சிறிய தவறான ஒரு கட்டத்தில் உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது. அதாவது சமைத்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் சில உணவுகளை அவ்வாறு சாப்பிடுவது ஆபத்துதான். அதன்படி நாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிட கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காலையில் வடித்த சாதம், இரவு வரை ஃப்ரஷா இருக்கணுமா? இந்த ட்ரிக்ஸ்-ஐ ஃபாலோ  பண்ணுங்க!

   

சாதம்:

   

சமைத்த சாதத்தில் பெசிலஸ் சீரியஸ் எனும் பாக்டீரியாவின் ஸ்போர்கள் இருப்பதால் இதனை சரியான முறையில் பிரிட்ஜில் சேமிக்காமல் சூடு செய்து சாப்பிட்டால் பிரச்சனை ஏற்படக்கூடும். அவ்வாறு சாப்பிட நினைத்தால் முறையாக சேமித்து வைத்திருக்க வேண்டும். சூடு செய்யும் போது ஒரு முறை கிளறிவிட்டு பிறகு சூடு செய்து சாப்பிடுவது நல்லது.

 

பளிச் பத்து 29: உருளைக்கிழங்கு | potato - hindutamil.in

உருளைக்கிழங்கு:

வேகவைத்த உருளைக்கிழங்கை மீண்டும் சூடு படுத்தினால் அது நஞ்சை உற்பத்தி செய்து செரிமான மண்டலத்தை பாதிக்கக்கூடும். ஒருவேளை நீங்கள் அவ்வாறு சூடு படுத்தி சாப்பிட நினைத்தால் நன்றாக மூடி போட்ட பிரிட்ஜில் வைத்து சேமித்து வைத்து தேவைப்படும்போது சூடுபடுத்தி சாப்பிடுவது நல்லது .

கீரை வகைகள் - Shop your Seeds

கீரை வகைகள்:

பசலைக்கீரை மட்டுமல்லாமல் வேறு எந்த கீரை வகைகளையும் சமைத்த பிறகு மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது ஆபத்தை விளைவிக்கும். அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட் ரைடுகளாக மாறி பிறகு நைட்ரோசம்மைன்களாக மாறிவிடும். இது புற்றுநோயை உண்டாக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.