தமிழ்நாட்டில் ஃபுட் ரிவ்யூ (Food Review) செய்யும் யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களைக் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் பெற்றுள்ள உணவகங்களில் மட்டுமே யூடியூபர்கள் இனி உணவு விமர்சனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடையின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் மட்டுமே வெறுமனே காட்சிப்படுத்திவிட்டுச் செல்லாமல், அங்கு சுகாதாரமான முறையில் தான் உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும் உன்னிப்பாகக் கண்காணித்துத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, உணவகங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது தங்களின் சொந்த விளம்பர நோக்கத்திற்காகவோ எவ்வித தவறான தகவல்களையும் பரப்பக் கூடாது என்றும், இந்த விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
