இந்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளை வழங்கியும் வருகிறது. இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதை அறிவித்தார். இந்த 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் இ.வி.கணேஷன்பாபு கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்திருந்த ‘கருவறை’ ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் தேவா, இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு புஷ்பா திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்ரீகாந்த் தேவா இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்றுள்ளார். இதோ அந்த வீடியோ…
ஒரு வருடத்தில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து…
குஜராத்தின் அகமதாபாத்தில் புதன்கிழமை, அக்டோபர் 29 அன்று, மூன்று வயது சிறுமி மீது கார் மோதிய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில்…
மெலிசா என்று பெயரிடப்பட்ட புயலானது கரீபியன் நாடுகளில் தாக்கி வருகிறது. ஹைதி, மைக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த புயலால் பாதிப்புகளை…
தமிழக தேர்தல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம் மற்றும்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக…