அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று ஊரை அடித்து உலையில் போடும் இந்த திமுக ஆட்சி. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக இருந்த பல பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் சுமார் 800 கோடிக்கு மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளது. அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் விளைவாக இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலை மோசடி என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஊழலில் திமுக அரசின் இந்த துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் அவருடைய சகோதரர்களின் நிறுவனங்கள், அதிகாரிகள் இணைந்து வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்தவர்களிடம் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலித்ததாகவும் அந்த பணத்தை ஒரு சில நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையின் கைகளை கட்டாமல் இருந்தால் சரி. அரசு பணி என்பது பல இளைஞர்களின் கனவு. அந்த கனவை நினைவாக்க இரவு பகல் பாராமல் போராடிக் கொண்டிருக்கும் அவர்களின் உழைப்பை தங்களின் கமிஷன் கொள்கைக்காக சிதைக்கும் திமுக அரசுக்கு ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று தெரிவித்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…