ஐயோ… என்ன கொடுமை சார் இது… ரூ 6.5 கோடி இருந்தும் வீடு கிடையாது?… சைவ உணவாளர்களுக்கு மட்டுமே பிளாட்… கொழுந்துவிட்டு எரியும் ‘உணவு பாகுபாடு’ சர்ச்சை… கொந்தளிக்கும் மக்கள்…!

By Swetha on ஆவணி 13, 2026

Spread the love

மும்பையின் தார்தேவ் பகுதியில் அமைந்துள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில், ரூ 6.5 கோடி மதிப்புள்ள 2BHK பிளாட் விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் முகவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த விளம்பரத்தில், குறிப்பிட்ட இந்த வீட்டை வாங்க “சைவ உணவளிப்பவர்கள் மட்டுமே தகுதியானவர்கள்” என்ற விலக்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததே இந்த கொந்தளிப்பிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த விளம்பரம் பரவியதைத் தொடர்ந்து, உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் வீடுகளை விற்பனை செய்வது அல்லது வாடகைக்கு விடுவது “உணவுப் பாகுபாடு” எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சிவசேனா உள்ளிட்ட அரசியல் தரப்பிலிருந்தும் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பாரம்பரியமாக மீன் மற்றும் இறைச்சி உண்ணும் மராத்தியர்களுக்கும், ஆகரி-கோலி சமூகத்தினருக்கும் இதன் மூலம் மும்பையில் வீடு மறுக்கப்படுகிறதா என்ற கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

   

https://www.instagram.com/reel/Db7aWpDMk8X/?utm_source=ig_web_button_share_sheet

   

மும்பை போன்ற பன்முகத்தன்மை கொண்ட பெருநகரத்தில், ஒருவரது தட்டில் என்ன உணவு இருக்கிறது என்பதை வைத்து சொத்து வாங்கும் உரிமையை நிர்ணயிப்பது சமூகப் பாகுபாடு எனப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், இதுபோன்ற உணவு சார்ந்த கட்டுப்பாடுகளைக் விதிக்கும் கட்டிட அமைப்புகள் மற்றும் முகவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.