ஜப்பானியப் பெண்ணைச் சூழ்ந்த 5 காமவெறியர்கள்… தைரியமாகச் சத்தமிட்ட பெண்… நடுநடுங்கித் தப்பியோடிய இளைஞர்கள்… போலீஸ் அதிரடி வேட்டை…!!!

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜெய்கர் கோட்டைக்குச் சென்ற ஜப்பானியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், ஐந்து இளைஞர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை கோட்டையைப் பார்வையிடச் சென்ற அந்தப் பெண், கணேஷ் போல் பகுதியில் தனியாக இருந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட மர்ம நபர்கள் தகாத முறையில் நடந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகச் சத்தமிடவே, பாதுகாப்பு ஊழியர் வருவதைக் கண்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இந்தச் சம்பவம் குறித்து ஆமெர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஐந்து இளைஞர்கள் மலையிலிருந்து வேகமாக இறங்கி ஓடுவது பதிவாகியுள்ளது. அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் சந்தேகத்திற்குரிய சுற்றுலா வழிகாட்டிகளிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் நிலைய அதிகாரி கௌதம் டோடாசரா தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனப் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

ஜெய்ப்பூரில் கடந்த ஒன்பது நாட்களில் வெளிநாட்டுப் பெண்களுக்கு எதிராக நடக்கும் இரண்டாவது பெரிய வன்முறைச் சம்பவம் இதுவாகும். சில நாட்களுக்கு முன்புதான் ஜல் மஹால் பகுதியில் செல்ஃபி எடுப்பதாகக் கூறி ஒரு வெளிநாட்டுப் பெண்ணை கும்பல் ஒன்று சூழ்ந்து துன்புறுத்தியது. “வந்தாரை வாழவைக்கும்” ராஜஸ்தான் சுற்றுலாவின் நற்பெயருக்கு இதுபோன்ற தொடர்ச்சியான அத்துமீறல்கள் பெரும் களங்கத்தை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Muthu Mani

Recent Posts

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

24 seconds ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

15 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

31 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

41 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

43 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

49 minutes ago