தமிழகச் சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் சமூகநீதித் துறை உள்ளிட்ட மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்கம் போல அவையின் நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பிற்பகலுக்குப் பிறகு அவைக்கு வந்த முதலமைச்சர் விஜய், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு செயலைச் செய்தார். அவர் தனது வழக்கமான சிறப்பு இருக்கைக்குச் செல்லாமல், அமைச்சர்கள் அமரும் வரிசையை நோக்கிச் சென்றார்.
அமைச்சர்கள் ஆதவ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையே இருந்த அமைச்சர் அருண்ராஜின் இருக்கையில் முதலமைச்சர் விஜய் அமர்ந்தார். தமிழகச் சட்டமன்ற வரலாற்றிலேயே ஒரு முதலமைச்சர் தனது பிரத்யேக இருக்கையைத் தவிர்த்து, சபை முடியும் வரை சக அமைச்சர்களின் வரிசையில் அமர்ந்திருந்தது இதுவே முதல்முறையாகும். திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய்யின் இந்த விசித்திரமான நகர்வு, அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்தது.
அங்கு அமர்ந்தவாறே அமைச்சர் செங்கோட்டையனுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். செங்கோட்டையன் பல்வேறு விஷயங்களை விவரித்துக் கூற, விஜய் அமைதியாகக் கைகளைக் கட்டியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவையில் நடந்த பிரச்சனைகள் குறித்துக் கேட்டறிந்தாரா அல்லது துறை சார்ந்த முக்கிய முடிவுகள் குறித்துப் பேசினாரா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை என்றாலும், இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
தனது அறைக்கு அழைத்துப்பேசக்கூடிய ஒரு விஷயத்திற்காக, முதலமைச்சர் விஜய் எளிய முறையில் அமைச்சர்கள் வரிசையில் சென்று அமர்ந்தது அவரது எளிமையைக் காட்டுவதாகக் கட்சியினர் கூறுகின்றனர். அதே சமயம், எதிர்க்கட்சியினர் நகைச்சுவையாகப் பேசும்போது சிரிப்பை அடக்க முடியாமல் வாயை மூடி சிரிப்பதும், அவையின் விவாதங்களை ரசிப்பதுமாக விஜய் நடந்துகொண்ட விதம், சட்டமன்றத்தில் ஒரு புதிய அரசியல் நாகரிகத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…