திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அண்மையில் அப்பகுதியில் நடைபெற்ற இறுதி ஊர்வலம் ஒன்றில், சூர்ய வேந்தன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இரண்டு நாட்கள் கழித்து விக்னேஷ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சூர்ய வேந்தனை கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக வெட்டியுள்ளார். அப்போது, அருகில் இருந்த காவலர் ஒருவர் விசில் சத்தம் எழுப்பியதைக் கேட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த சூர்ய வேந்தனை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் மூன்று சிறுவர்களை அதிரடியாக கைது செய்தனர். விக்னேஷ் சிறையிலும், சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தேடி வருவதுடன், பாதிக்கப்பட்ட சூர்ய வேந்தன் மீதும் ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் இருப்பதையும் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…
தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…