முதலில் சிம்பு இப்போ தனுஷாம்.. ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகத்துக்கு இவர்கள் தான் தான் காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்…

By Begam

Published on:

தமிழ் திரை உலகில் அதிகம் பேசப்படும் இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். இவரது காதல் கதை படங்களுக்காகவே ஒருதனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் எழுதும் காதல் வசனங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறது. இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

   

இயக்குனர் என்பதையும் தாண்டி தற்பொழுது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், சீதாராமம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தும் அசத்தியுள்ளார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல விமர்சனத்தையும், வசூலில் சாதனையும் புரிந்தது. இவரது இயக்கத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.

நடிகர்  விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள் மற்றும் 2 பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.

இப்போது படம் ரெடியாகி கடந்த 24ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், கடன் கொடுத்தவர்கள் வந்து தடுத்ததால் படத்தை வெளியிட முடியவில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனர் மதனுடன் இணைந்துதான் கவுதம் மேனன் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

மதன் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவுக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்பட்டு சிம்பு முதலில் தடை செய்தார். அதேபோல், ‘கொடி’ படத்தில் நடித்தபோது தனுஷுக்கு சம்பள பாக்கி என்பதால் அவரும் தற்பொழுது தடையாக வந்து நிற்கிறாராம்.  இதனால் தான் ‘ துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.