விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் புகழ் . குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார் . இவரின் திரைத்துறை வாழ்க்கை இதிலிருந்து தான் ஆரம்பித்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் ஓரளவு ரசிகர்கள் கூட்டம் இருந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் அலை கடலென ரசிகர்கள் கூட்டம் பெருகியது.
இந்த நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டை கண்டு பலர் இவரின் மிகப்பெரிய ரசிகர்களாகவே மாறிவிட்டனர். இவரை பார்ப்பதற்காகவே பலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தனர். இவர் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸ் ரியா வை தற்பொழுது கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின் முதல் வேலையாக தன்னை சினிமாவில் இந்த அளவுக்கு உயர உதவியாக இருந்த மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியிடம் ஆசிர்வாதத்தை பெற்றார். உடல் நலக்குறைவால் வடிவேல் பாலாஜி 2020 செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். அவரின் புகைப்படத்திற்கு கீழே நின்று பென்சியும் புகழும் ஆசீர்வாதம் வாங்கும் புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…