‘ஷாக்… வறுமையைப் போக்கச் சென்ற இடத்தில் கொடூரம்… புத்தாண்டு விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிய… சில நாட்களிலேயே பறிபோன இளம் யுவதியின் உயிர்…! நடந்தது என்ன…?”

By Swetha on ஆடி 23, 2026

Spread the love

ஹோமாகம, கட்டுவான பகுதியில் உள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயின் வீரியத்தால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்திருந்ததால், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் மரபணு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் பன்னிப்பிட்டியைச் சேர்ந்த மரியோ எட்வர்ட் (55), தெனியாயவைச் சேர்ந்த சஹன் உதார (19), கமகே திலீப் மதுசங்க (19), அட்டகலம்பன்னவைச் சேர்ந்த சச்சின் தில்ஷான் (24) மற்றும் ஹட்டன் – மஸ்கெலியாவைச் சேர்ந்த வரதராஜ் தமயந்தி (26) ஆகிய ஐவரே உயிரிழந்தவர்களாவர்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான 26 வயதான வரதராஜன் தமயந்தியின் உடல், இன்று (23) அதிகாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பெற்றோர், ஒரு மூத்த சகோதரர் மற்றும் இரண்டு இளைய சகோதரர்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை ஒரு தோட்டத் தொழிலாளி என்பதால், குடும்பத்தின் வறுமை மற்றும் நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த ஹோமாகம தொழிற்சாலையில் பணியில் சேர்ந்துள்ளார்.

   

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காகக் கிடைத்த இரண்டு நாள் விடுமுறையில் கடைசியாக வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்ட இவர், பின்னர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக நேரிட்ட இந்தத் தீ விபத்தில் உயிரிழந்த தமயந்தியின் இறுதிச் சடங்குகள், இன்று (23) தோட்டப் பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.