சண்டை தான் வரும்…! “தெரு நாய்களுக்கு உணவு அளித்தால் ரூ.5,000 அபராதம்…” மீரா பயந்தர் மாநகராட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு…!

By Devi Ramu on புரட்டாதி 3, 2026

Spread the love

மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் மக்களுக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. மாநகராட்சியின் இந்த உத்தரவுக்குப் பிரபல விலங்கு நல ஆர்வலர் ரோஷன் பாதக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையும் 79.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட நகரத்திற்கு வெறும் 20 இடங்கள் மட்டுமே ஒதுக்குவது சட்டவிரோதமானது என்றும், இது மத்திய அரசின் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ABC) விதிகள் 2023-க்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாய்கள் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கொண்ட விலங்குகள் என்பதால், உணவிற்காக ஒரே இடத்திற்கு அவையைக் கட்டாயப்படுத்தும் போது அவற்றுக்கிடையே கொடூர மோதல்கள் ஏற்பட்டு மனிதர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் எச்சரித்துள்ளார். இந்த அபராத உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனப் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தற்போது ஒதுக்கப்பட்ட 20 இடங்கள் என்பது முதற்கட்டம் மட்டுமே என்றும், விரைவில் இந்த எண்ணிக்கை 40 இடங்களாக உயர்த்தப்படும் என்றும் மாநகராட்சி கால்நடை அதிகாரி டாக்டர் விக்ரம் நிராட்லே விளக்கம் அளித்துள்ளார்.