அடேங்கப்பா… கோடிகளில் புரண்ட வாழ்வு.. 80 வயதில் முதியோர் இல்லத்தில் அடைக்கலம்… யார் இந்த ‘லெஜண்ட்’ மோகன் சர்மா?…

By Swetha on ஆடி 30, 2026

Spread the love

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த மூத்த கலைஞர் மோகன் சர்மா, தமது 80-வது வயதில் சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் செய்தி கலையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபிலிம் சேம்பர் தலைவராக பதவி வகித்ததுடன், FTII-இல் நடிப்பு பயின்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரான இவர், ‘பார்த்திபன் கனவு’, ‘சச்சின்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

நடிகை லட்சுமியின் இரண்டாவது கணவரான மோகன் சர்மா, திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட முறிவுக்குப் பின் தனிமையில் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் தி.நகரில் கார் விற்பனை மற்றும் வீடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மர்மக் கும்பலால் தாக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார். புகழின் உச்சத்தில் இருந்த ஒரு மூத்த கலைஞருக்கு நேர்ந்த இந்த அடுத்தடுத்த சோதனைகள், திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தின.

   

இருப்பினும், முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பது குறித்து விளக்கமளித்துள்ள மோகன் சர்மா, “வயது மூப்பு மற்றும் தளர்ச்சி காரணமாக, மன அமைதிக்காக நானாகவே முன்வந்து இங்கு தங்கியுள்ளேன்; என் தேவைகளையும் மருத்துவ உதவிகளையும் என் நண்பர்களே கவனித்துக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். வாழ்க்கை ஏற்படுத்திய மாற்றங்களால் அமைதியைத் தேடி முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ள இந்த மூத்த கலைஞரின் தற்போதைய நிலைமை அனைவருக்கும் ஒருவித நெகிழ்ச்சியையும் சோகத்தையும் அளிப்பதாக உள்ளது.