Connect with us

Feb 14 : நாளை காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் ரீ – ரிலீஸ் ஆகும் காதல் படங்கள்.. என்னென்ன தெரியுமா..?

CINEMA

Feb 14 : நாளை காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்கில் ரீ – ரிலீஸ் ஆகும் காதல் படங்கள்.. என்னென்ன தெரியுமா..?

பிப்ரவரி என்றாலே காதல் வாசம் வீசும் மாதம் காதலர்களுக்கு தோன்றும். அதிலும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளன. அந்த சமயத்தில் காதலர்கள் அனைவரும் திரையரங்குகளை நாடுவார்கள், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் காதலர் தினத்தையொட்டி கிளாசிக் ஹிட் காதல் படங்களை ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு காதலர் தினத்தன்று எந்தெந்த படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தெரியுமா?

காதல் என்றாலே கவுதம் மேனன் தான், இவர் காதலுக்காகவே படம் எடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்த படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்திருந்த இப்படம் கடந்த 2010-ம் ஆண்டு திரைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்திற்கு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் சில திரையரங்குகள் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய உள்ளன. அடுத்ததாக

பான் இந்தியா ஆனந்தி அளவில் காதல் காற்று வீசிய படம் தான் சீதா ராமம். துல்கர் சல்மான் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார். இப்படம் கடிதம் மூலம் மாறி அமைத்து இருவருக்குள் காதல் தோன்றி கடைசி வரை மறையாமல் இருந்து ரசிகர் மத்தியில் கண்கலங்க வைத்த படம்தான். இந்தப் படமும் வருகிற பிப்ரவரி 1 ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

   

மலையாள படமாய் இருந்தாலும் தமிழ்நாட்டில் திரையரங்கில் தெறிக்கவிட்ட படம் தான் இது, காதல் படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பிரேமம் தான். இப்படத்தை கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் வேறலெவலில் கொண்டாடினர். அதற்கு காரணம் அதில் தமிழ்நாட்டு மண்வாசனையும் பெண்வாசனையும் இருந்தது. அதனால் இப்படம் தமிழ்நாட்டில் வெகுவாக காதலர் மத்தியில் பரவியது, அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாட்டில் தங்கத்தாரகையில் வைத்து தாங்கிய படம் தான் இது, தமிழ் சினிமாவில் காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் 96 படமும் ஒன்று. பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இருவரும் ஜோடியாக நடித்திருந்த இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்தது. பள்ளிப்பருவ காதலை கண்முன் கொண்டுவந்த படமாக இது இருந்தது. தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றான இந்த 96 வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதனை அடுத்து சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்வதை பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top