#image_title
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க பல இன்னல்களை கடந்து வந்தவர் எஸ் ஜே சூர்யா. இன்று எஸ்.ஜே சூர்யா தனது 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இயக்குனர் வசந்த், ஏ.ஆர் முருகதாஸ் ஆகியோரிடம் எஸ்.ஜே சூர்யா உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இறைவி படத்தின் மூலம் எஸ்.ஜே சூர்யா கம்பேக் கொடுத்தார். அதன் பிறகு ஸ்பைடர், நெஞ்சம் மறப்பதில்லை, மெர்சல், மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இவரை ரசிகர்கள் நடிப்பு அரக்கன் என அழைக்கின்றனர். நாட்களுக்கு முன்பு ரிலீசான இந்தியன் 2 படத்திலும் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். தனுஷின் ராயன் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். வருகிற 26ஆம் தேதி ராயன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இவரது கால்ஷீட்டுக்காக இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர் . மாஸ் ஹீரோக்களை வைத்து எஸ்.ஜே சூர்யா படம் இயக்கியுள்ளார்.
அந்த வகையில் முதலாவதாக கடந்த 1999-ஆம் ஆண்டு அஜித்குமாரை வைத்து எஸ்.ஜே சூர்யா வாலி திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் சிம்ரனும் ஜோதிகாவும் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து 2000 ஆண்டு எஸ்.ஜே சூர்யா குஷி படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா நியூ திரைப்படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் அவரே ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக 2005-ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா அன்பே ஆருயிரே படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நிலா என்ற நடிகை நடித்துள்ளார். ஊர்வசி, சந்தானம், சந்தான பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த இசை படம் ரிலீஸ் ஆனது. இந்த படமும் மக்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது .
இந்தியாவின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள 'வீட்டிலிருந்தே வேலை' செய்யும்…
கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி,…
மும்பை காரில் உள்ள கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகே, ஆட்டோ மீது ராட்சத மரம் விழுந்த விபத்தில் இரண்டு…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…
தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…