Categories: சினிமா

தேவயானியின் பேச்சைக் கேட்டு எமோஷனலான நகுல்.. மேடையில் காலில் விழுந்து.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

நடிகை தேவயானி தனது தம்பி குறித்து மேடையில் பேசியபோது எமோஷனலான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் தேவயானி. ஹோம்லியான நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டு இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். அதையடுத்து சீரியலில் வலம் வந்த இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த சீரியல் கோலங்கள்.

தொடர்ந்து சினிமா சீரியல் குடும்பம் என அனைத்தையும் அழகாக கவனித்துக் கொண்டிருந்தார் இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகள் இனியா தேவயானி போலவே நடிகையாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகின்றார்.

தேவயானியின் தம்பி தான் நகுல். இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் குண்டாக இருந்த இவர் அடுத்த திரைப்படத்தில் கடுகடவென உடல் எடையை குறைத்து அவரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறினார். பின்னர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமீப நாட்களாக அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது நகுல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாஸ்கோடகாமா. ஆர்ஜிகே இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வருகிற ஜூலை 20ஆம் தேதியான இன்று வெளியாகும் என்று பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.

அந்த வகையில் தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை தேவயானி, கேஎஸ் ரவிக்குமார், நகுல் என பலரும் கலந்து கொண்டனர். மேடையில் நடிகை தேவயானி பேசியபோது அவன் என் தம்பி. அவனை என் தம்பின்னு சொல்லிக்குறதுக்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்று கூறி எமோஷனல் ஆகிவிட்டார்.

உடனே நகுலும் மேடையில் அழுதுவிட்டார். பின்னர் தேவயானி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்ட நகுல் அவரை ஆரத்தழுவி சமாதானப்படுத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் என்ன ஒரு பாசம் என்று கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

ஈரானின் ‘அமைதி’ ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த டிரம்ப்.. “இனி அவர்கள் சிரிக்க மாட்டார்கள்” நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத் திட்டத்தை அமெரிக்க…

3 minutes ago

ஸ்டாலின் இல்லத்திற்கு வந்த CM விஜய்..! ஓடி வந்து கட்டிப்பிடித்து வரவேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. இதுதான் அரசியல் நாகரீகம்..!!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்திப்பதற்காக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார். அப்போது, தமிழ்நாடு…

13 minutes ago

BIG BREAKING: ஸ்டாலினை அவர் இல்லத்தில் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்..!!

தமிழக முதலமைச்சர் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப்…

18 minutes ago

“இந்தியாவுக்குள்ள வந்துட்டேன்” என ரீல் சுற்றிய பாகிஸ்தான் பெண்.. ஆனா எல்லாமே பொய்யா கோபால்..? நெட்டிசன்கள் கொடுத்த மரண அடி…!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், கசூர் அருகே உள்ள கண்டா சிங் எல்லைப் பகுதியில் நின்று கொண்டு, தான் மிக…

23 minutes ago

ச்சீ அருவருப்பு..! பீட்சாவில் எச்சில் துப்பிய ஊழியர்… இதை பார்த்தா இனிமே வாங்கி சாப்பிடவே தோணாது.. வைரல் வீடியோவால் அதிரடி கைது..!!

நொய்டாவில் உள்ள பீட்சா கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் எச்சில் துப்பும் வீடியோ சமூக…

24 minutes ago

அதிமுகவில் அதிகாரப்பூர்வ பிளவு… இபிஎஸ் பிடியில் வெறும் 17 எம்.எல்.ஏ-க்கள்.. வேலுமணி பக்கம் சாய்ந்த 30 பேர்… பரபரக்கும் அரசியல்..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக உட்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில்…

28 minutes ago