“ஒரு ரீல்ஸ்… 1000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாத ஜெயில்”…. ரயில்வே போலீசாரின் அதிரடி ஆபரேஷன்…. ரயிலில் சாகசம் செய்ய நினைத்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ட்விஸ்ட்….!

Spread the love

சமீபகாலமாக, சமூக வலைதளங்களில் லைக்குகளையும், பார்வைகளையும் குவிப்பதற்காக இளம் தலைமுறையினர் மத்தியில் ‘ரீல்ஸ்’ மோகம் விபரீதமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ரயில் நிலையங்களிலும் ஓடும் ரயில்களிலும் ஆபத்தான முறையில் வீடியோ எடுப்பது ஃபேஷனாகிவிட்டது. ஓடும் ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி கைப்பிடி கம்பிகளைப் பிடித்து ‘ஸ்டைல்’ காட்டுவதும், தண்டவாளத்திற்கு மிக அருகில் நின்று வீடியோ எடுப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இளைஞர்களின் இந்த பொறுப்பற்ற செயலால், அவர்கள் தங்களின் உயிரை பணயம் வைப்பது மட்டுமின்றி, கடைசி நேரத்தில் ரயிலைப் பிடிக்க வரும் பிற பயணிகளும் படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி விபத்துகளில் சிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. கூட்டம் இல்லாத நேரங்களிலும் கூட, படிக்கட்டுகளில் நின்றுகொண்டு ஆபத்தான முறையில் பயணிப்பதை இவர்கள் பெருமையாக கருதுகின்றனர்.

இந்த ஆபத்தான விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் (RPF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே சட்டத்தின்படி, இது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் ₹1,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறை தண்டனை, அல்லது இவை இரண்டும் சேர்த்தே விதிக்கப்பட வாய்ப்புள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள 94 ரயில் நிலையங்களில், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் இவ்வாறு விதிகளை மீறியதாக 268 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் போத்தனூர் மற்றும் கோவை ரயில் நிலையங்களில் மட்டும் 13 வழக்குகள் அடங்கும். பிடிபடுபவர்களில் பெரும்பாலானோருக்கு ₹1,000 அபராதம் விதிக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டாலும், ஒரு சில நொடிகள் புகழுக்காக தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் இளைஞர்கள் பாழாக்கிக் கொள்ளக் கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Nanthini

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

5 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

5 மணத்தியாலங்கள் ago