அதிமுகவின் முக்கியப் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கே.டி. பச்சைமால் உள்ளிட்ட நான்கு முன்னாள் அமைச்சர்களும், அவர்களோடு சேர்த்து சுமார் 25 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை மீது ஏற்பட்ட கடுமையான அதிருப்தியே இந்த அதிரடி முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் அக்கட்சியின் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் கடம்பூர் ராஜு உள்ளிட்ட நான்கு முன்னாள் அமைச்சர்களும், சில முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, தவெக-வின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…