சிம்ரன், தமிழ் திரைவுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் வந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது, அவருடைய கதாபாத்திரம் பெரிதளவில் பேசபட்டது .
இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்தப் படவிழாவில் கலந்துக்கொண்டு பேசிய சிம்ரன்; நடிப்பு, நடனம், தோற்றத்தை நிலையாக வைத்துக் கொள்வது மிகவும் கடினம் 20 வருடங்களாக நிலையாக வைத்திருக்க காரணம் என்னுடைய நண்பர்களே.திரிஷா மிகவும் திறமையானவர் பேரழகி. இவர் அஜித், விஜய் போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார், மணிரத்தினம் இயக்கத்தில் நடித்துள்ளார். ஜோடி படத்தில் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்திருந்தோம். ஜோடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இப்போது அதை நினைத்தாலும் சந்தோஷமாக உள்ளது. நான் ரீசன்டாக நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, படம் இந்தளவு வெற்றியை கொடுக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ் சினிமாவில் மனிதநேயத்தோடு இணையும் படங்களை எடுக்க வேண்டும். வருடத்திற்கு 2 படங்களாவது இதுபோன்ற திரையிடப்பட வேண்டும்.
தற்போதைய காலத்தில் அனைவருமே செல்போன்களில் மூழ்கியுள்ளோம். இது நம்முடன் இருக்கும் மனிதர்களையே தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது. செல்போன் உலகம் இல்லை அருகில் உள்ள மனிதர்களிடம் பழகுங்கள். செல்போன் ஒன்றும் வாழ்க்கை இல்லை. அது நம்மளை நோயாளியாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. எனக்கு முன்னுதாரணமான நடிகை ஸ்ரீதேவி தான். அவருடைய அழகு, நடிப்பு, நடனம் ஏன் அவர் கட்டும் புடவை விதம் கூட எனக்கு மிகவும் பிடிக்கும்.
கூலிப்பட ட்ரைலர் வந்துவிட்டது, எனக்கு மிகவும் பிடித்துள்ளது. நான் ரஜினியின் ரசிகை. பேட்டை படத்தில் கூட நான் அவரைப் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன். அங்கிருக்கும் எவருக்கும் இது தெரியாது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு எளிமையான நடிகர், திரைப்ட விழாவிற்கு கூட மேக்கப் இல்லாமல் வருவார். இவர் அனைவருக்கும் உதாரணமாக வாழ்கிறார். கூலி படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று சிம்பரன் உரையை முடித்துக் கொண்டார்.
