Categories: CINEMA

படம் முழுக்க அந்த காட்சி தான்.. லோகேஷ் ஏன் இவ்ளோ மோசமான படம் பண்ணனும்.. Fight Club படம் எப்படி இருக்கு..? Movie Review ..

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்போது தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். ஜி ஸ்குவாட் என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் எடுக்கப்பட்டு, இன்று திரைக்கு வந்திருக்கும் படம் பைட் கிளப். உறியடி விஜயகுமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தை அப்பாஸ் ரகமது இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதைப்படி, ஒரு ஏரியாவில் சமூக குற்றங்கள் அதிகமாக நடக்கிறது குறிப்பாக கஞ்சா விற்பனை, கஞ்சா பொட்டலங்கள் விநியோகம், கஞ்சாவை அதிகமாக புகைக்கும் இளைஞர்கள் என ஒரு கஞ்சா கலாசாரம் நிறைந்த பகுதியாக அந்த ஏரியா உள்ளது.

#image_title

பெஞ்சமின் என்ற ஒருவர், வழிதவறிய போதை இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு பாக்ஸிங் கற்றுத் தருகிறார். இதையடுத்து அவரை அரசியல் பிரமுகர் ஒருவரும், அவரும் தம்பியும் சேர்ந்து கொலை செய்து விடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. படத்தின் பாதி வரை இதுதான் படம் என்ற நிலையில், இடைவேளைக்கு பிறகு தொடரும் இரண்டாம் பாதியிலும் இந்த சம்பவங்களை பின்பற்றியே படம் தொடர்கிறது. அதாவது மிளகாய் வத்தல் விற்பது போல கஞ்சா விற்பனை, கஞ்சா கடத்தல், கஞ்சா புகைத்தல் என படம் முழுக்க திரையில் கஞ்சா புகைதான் தெரிகிறது. படத்தில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை. படத்தின் கதையில் எந்த தெளிவும் இல்லை. பழைய இளையராஜா பாடல்களை பல இடங்களில் ஒலிக்க விட்டுள்ளனர்.

#image_title

படத்தின் கதைக்களம் தூத்துக்குடியா, வடசென்னையா என்பது கூட புரியவில்லை. எப்படி இப்படி ஒரு குழப்பமான படத்தை தயாரிக்க, அதுவும் முதன்முறையாக தனது தயாரிப்பு நிறுவனம் பெயரில் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் முன்வந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது. லோகேஷ் கனகராஜ் போதைப்பொருள் என்ற விஷயத்தை மட்டுமே முன்னிறுத்தி இந்த படத்தை தயாரித்திருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. அவர் போதைப்பொருள் என்ற விஷயத்தை தான் அவர் இயக்கும் படங்களிலும் வைக்கிறார். அவர் தயாரிக்கிற படத்திலும் அதுவே இருக்கிறது. இவர் தமிழக மக்களை போதைப் பொருள் பயன்படுத்த சொல்லும் மோடிவ்வில் தான் தமிழ் சினிமாவுக்கே வந்தாரா, அல்லது போதைப் பொருள் தவிர இவருக்கு வேறு எதுவுமே கண்ணுக்கு தெரியாதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. இனியும் இதுபோன்ற குப்பையான போதை கலாசார படங்கள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயமாக அவசியமில்லை.

Sumathi
Sumathi

Recent Posts

106 வயதில் எப்படி இதெல்லாம் செய்ய முடியும்..? இந்தியன் 2 ட்ரைலரால் வெடித்த சர்ச்சை.. இயக்குனர் சங்கர் கொடுத்த விளக்கம்..!

106 வயதில் எப்படி இப்படியெல்லாம் சண்டை காட்சிகளில் நடிக்க முடியும் என்பது குறித்த கேள்விக்கு இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார். இயக்குனர்…

42 நிமிடங்கள் ago

குட்டியான டவுசரில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள நடிகை ரட்சிதா மகாலட்சுமி.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ரட்சிதா மகாலட்சுமி குட்டை டவுசரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது…

2 மணி நேரங்கள் ago

நீச்சல் குளத்தில் இருந்த படி புகைப்படத்தை வெளியிட்ட சூர்யா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

நடிகை பிரணிதா நீச்சல் குளத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பெங்களூருவை பூர்விகமா கொண்டவர் பிரணிதா.…

3 மணி நேரங்கள் ago

ஒரு போட்டோ கூட இன்ஸ்டால போட விட மாட்டாரு.. லேடிஸ்க்கு சினிமா எதுக்குன்னு திட்டுவாரு.. தந்தை KS ரவிக்குமார் குறித்து பேசிய மகள்..!

எங்களுடைய அப்பா எங்களை சினிமாவுக்குள் வர விட்டதே கிடையாது என்று கேஎஸ் ரவிக்குமாரின் மகள் மல்லிகா ஒரு பேட்டியில் கூறி…

3 மணி நேரங்கள் ago

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா…

4 மணி நேரங்கள் ago

என்ன படம் எடுத்து வச்சிருக்க..? பாரதிராஜாவால் தப்பு கணக்கு போட்ட சிவாஜி.. மாஸ்டர் பீஸ் படம் உருவான கதை..!!

முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதில் இடம்பெற்ற 8 பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. சிவாஜி கணேசனின் சினிமா…

4 மணி நேரங்கள் ago