அட கொடுமையே… கணவர் அழைக்கிறார் என பொய் கூறி… வெளியே வரவழைத்து 27 முறை கத்திக்குத்து… பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், சந்தியா ஷர்மா (28) என்ற ஆசிரியை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, அமித் (21) என்ற இளைஞரால் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் கூப்பிடுவதாகப் பொய் கூறி வகுப்பறையிலிருந்து வெளியே வரவழைத்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் 27 முறைக்கும் மேலாகச் சரமாரியாகக் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பள்ளியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், கோட் கிராமத்தைச் சேர்ந்த அமித்தை இரண்டு மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்து, மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில், சந்தியா மீது தனக்கிருந்த ஒருதலைப்பட்சக் காதலை அவர் நிராகரித்ததால் ஆத்திரமடைந்த அமித், இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு கத்தியை வாங்கி இக்கொலையைச் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அமித் மீது சந்தியா பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்த நிலையில், அமித் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து சந்தியா தன் வசிப்பிடத்தையும் பள்ளியையும் மாற்றியிருந்தார். இருப்பினும், பள்ளிக்கு செல்லும் வழியில் தாக்கினால் பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில், நேரடியாகப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே புகுந்து இக்கொடூரத்தைச் செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2084322481813495895/video/1

   

உயிரிழந்த சந்தியாவிற்கு 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். அமித் மீது முன்பே பாலியல் துன்புறுத்தல் புகார் அளிக்கப்பட்டபோதே காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், தன் மனைவியின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று சந்தியாவின் கணவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள அமித்திடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் வாகனத்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.