ஐயோ… என்னை கொன்னுடுவாங்க… நள்ளிரவில் கதறிய மாணவி… ஹோம்ஸ்டேவில் சடலமாக மீட்பு… காதலன் மீது குற்றச்சாட்டு… பகீர் பின்னணி என்ன?…

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் 22 வயது மாணவி நிர்மிஷா தாகூரியா, தனது காதலன் ஆசிஃப் அலியுடன் தங்கியிருந்த ஹோம்ஸ்டேவில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று இரவு நிர்மிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஆசிஃப் அலி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், நிர்மிஷாவின் குடும்பத்தினர் இந்த வாதத்தை மறுத்து தீவிர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். நள்ளிரவில் நிர்மிஷாவிடமிருந்து தங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில் சிலர் “தன்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று பயத்துடன் கூறிய சில நொடிகளிலேயே தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

   

இச்சம்பவம் குறித்த தகவல் பரவியதை அடுத்து, வலதுசாரி அமைப்புகள் வீதிகளில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இச்சம்பவத்தின் பின்னணியில் ‘லவ் ஜிகாத்’ சதி இருப்பதாக குற்றம்சாட்டும் அமைப்பினர், இதில் தொடர்புடைய நபர்கள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.