அடேய்… எவ்வளவு தூரம் ஓடுவீங்க?… பிடிபடாமல் தப்ப முடியாது… ஓடும் காரின் கூரையில் 40 கி.மீ தொங்கியபடி… விரட்டிப் பிடித்த கோவை போலீஸ்… ராஜஸ்தான் கும்பல் கைது… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

By Swetha on புரட்டாதி 28, 2026

Spread the love

கோயம்புத்தூர் கோவில்பாளையம் பகுதியில், தடையை மீறி கார் ஒன்றில் குட்கா கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சார்பு ஆய்வாளர் விக்னேஷ் தலைமையிலான காவல்துறையினர் சிகளம்பாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்குரிய காரை நிறுத்த முயன்றபோது, கடத்தல்காரர்கள் காரை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பியோட முயன்றனர்.

அப்போது, தப்பிச்செல்ல முயன்ற காரைப் பிடிக்கத் துணிச்சலாகச் செயல்பட்ட தலைமைக் ஸ்டபிள் வேல்முருகன், ஓடும் காரின் கூரை மீது பாய்ந்து ஏறினார். சுமார் 40 கிலோமீட்டர் தூரம் காரின் மேலேயே ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணித்து, கடத்தல்காரர்களின் கவனத்தைச் சிதறடித்து அவர்கள் தப்பிவிடாமல் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். சினிமா பாணியில் அமைந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

https://twitter.com/arunruby08/status/2104165796272295971/video/1

   

இறுதியில், அவிநாசி சாலையில் காரைச் சுற்றி வளைத்த காவல்துறையினர், காரிலிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும், பெங்களூருவிலிருந்து கோவைக்கு சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.